முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர்கள் பெருமைக்குறியவர்களே! மகிழ்ச்சி!
Today is Tirunelveli ‘s 226 year anniversary. In the year 1790 the British created Tirunelveli. 

Thiru- Respect 
Nel- Rice grain 
Veli- Security 

இன்று....
திருநெல்வேலி நகரத்தின் 226 வது மலர்ந்த தினம். 1790ம் ஆண்டு இதே நாளில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்டது தான் திருநெல்வேலி.

திரு=மதிப்பு 
நெல்=உணவு
வேலி=பாதுகாப்பு

*திருநெல்வேலி* பிரசித்தம் பெற்றது; ஏன் தெரியுமா?

10 சிறப்பம்சங்களை கொண்டது.

1) முதல் ஈரடுக்கு மேம்பாலம் பெற்ற *இந்திய நகரம்*

2) தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிவதலம் பெற்ற நகரம்.

3) தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய தேரை கொண்ட மாநகரம்.

4) நான்கு ரத வீதிகளில் இருந்து வளர ஆரம்பித்த நகரம்.

5) ஐந்து வகையான *நிலங்கள்* பெற்ற தமிழகத்தின் ஒரே மாவட்டத்தின் தலைநகரம்.

6) தமிழ்நாட்டின் ஆறாவது மிகப் பெரிய நகரம்.

7) சரிகமபதநிச என்ற ஏழு
ஸ்வரங்கள் பாடும் இசைத்தூண்களை கொண்ட ஒரே நகரம்.

தினசரி எட்டு லட்சம் மக்களால் இயங்கிக் கொண்டிருக்கும் பெருநகரம்.

9) ஒன்பது கி.மீ சுற்றளவு கொண்ட மாநகரம்.

10) தமிழகத்திலேயே அதிகமாக பத்து அணைகளை கொண்ட செழிப்பான மாவட்டம்.

*தென்பாண்டி சீமை* என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென் தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலித் தமிழ் ஆகும். இவ்வழக்கு மொழியை 
நெல்லைத்தமிழ் என்றும் அழைப்பர்.

தமிழ் மொழி *பொதிகை* மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத்தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே *நெல்லைத்தமிழ்* தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது. 

பெரியோரை *அண்ணாச்சி* என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.

இது தற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழ் பயன்பாட்டிலுள்ளது. 'கிறு', 'கின்று', 'நின்று', ஆநின்று போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி
வழக்குத்தமிழில்
அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

⚔பழகி பார் பாசம் தெரியும்...! 

⚔பகைத்து பார் வீரம் தெரியும்...! 

⚔நாங்க திருநெல்வேலிகாரங்க...!   

⚔சித்தர்களில் சிறந்த *அகத்தியர்* வளர்ந்த இடம் - திருநெல்வேலி 

⚔காப்பியத்தின் மன்னன் *தொல்காப்பியர்* வளர்ந்த இடம் - திருநெல்வேலி

⚔வீரத்தின் அடையாளம் பாஞ்சாலங்குறிச்சி- திருநெல்வேலி

⚔தியாகத்தின் தியாகி *வாஞ்சிநாதன்* பிறந்த இடம் - திருநெல்வேலி 

⚔முதன் சுதந்திரபோராட்ட வீரன், வீரத்தை முத்தமிட்ட *வீரபாண்டிய கட்டபொம்மன்* - திருநெல்வேலி 

⚔ முதன் முதலாக ஆங்கிலேயர்கள் ஆயுதக்கிடங்குகளை மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்திய "படை தளபதி முதல் தியாகி வீரன் சுந்தரலிங்கம்". கவர்னகிரி-ஓட்டப்பிடாரம்.

⚔நாளிதழ்களின் அரசர் *சிவந்தி ஆதித்தனார்* பிறந்தது - திருநெல்வேலி 

⚔கலைத்துறையின் *singam ஹரி* - திருநெல்வேலி 

⚔ தமிழகத்தை அண்ணார்ந்து பார்க்க வைத்த நிகழ்ச்சி *நீயா நானா* இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் - திருநெல்வேலி

⚔ திருநெல்வேலிக்காரன் சாதிக்காத துறையும் இல்லை, கலையும் இல்லை

⚔தாகத்துக்கு *தாமிரபரணி*

⚔அருவிக்கு *குற்றாலம்*

⚔தென்றலுக்கு *தென்காசி*

⚔புலிக்கு *முண்டந்துறை*

அப்பளத்திற்கு... *கல்லிடைக்குறிச்சி*
⚔அழகுக்குக்கு *சேரன்மகாதேவி*

⚔படிப்புக்கு *பாளையங்கோட்டை*

⚔அணைக்கட்டுக்கு *பாபநாசம்*

*ஆளை சீண்டினால் அருவா*

⚔தமிழுக்காக 
பாடுபடுவதில் திருநெல்வேலி ரத்தங்களுக்கு
அன்றும் இன்றும் என்றும் பெரிய பங்கு உண்டு.இந்த செய்தி திருநெல்வேலி மாவட்ட த்தில் பிறந்தவர்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...