முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒவ்வொரு தருணமும் ஒரு தேர்வு

ஒரு நேரத்தில், ஒரு இளம் பெண்  காரை ஓட்டிக் கொண்டு சென்றாள். அவள் பக்கத்து இருக்கையில்,  அவளது அப்பா அமர்ந்திருந்தார்.     
 சில மைல் தூரம் சென்ற பிறகு, அவர்கள்  ஒரு புயல் காற்றை சந்திக்க நேர்ந்தது. 

அந்தப் பெண் பயந்து, அப்பா! நான் இப்போது என்ன செய்வது?  என்று கேட்டாள்.  தொடர்ந்து காரை ஓட்டு, என்று மிக அமைதியாக தந்தை பதில் கூறினார்.
அந்தப் பெண்ணும் காரை ஓட்டிக் கொண்டே இருந்தாள். சில மீட்டர் தொலைவு சென்ற பிறகு, மற்ற கார்கள் புயல் காற்றால் ஒரு பக்கமாக இழுத்துத் தள்ளப்படுவதைப் பார்த்தாள். காற்று மிகவும் மோசமாக இருந்தது. 

 இந்தக் காட்சியைப் பார்த்து மிரண்டு போன அந்தப் பெண்,  திரும்பவும் அவள் அப்பாவிடம்  நாமும் புயல் காற்றால் இழுக்கப்படுவோமா? என்றாள்.     இல்லை. நீ காரை மட்டும் பார்த்து, தொடர்ந்து ஓட்டு, என்றார். அந்தப் பெண்ணும்  அப்படியே செய்தாள்.   
சிறிது தூரம் சென்ற பிறகு,  நிறைய கார்கள்   புயலால், இழுக்கப் படுவதைப் பார்த்தாள்.  இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்தப் பெண் காரின் வேகத்தைக் குறைத்து, அப்பாவிடம் புயல் எழுப்பிய தூசியால்,  என்னால் எதையும்  தெளிவாக பார்க்க முடியவில்லை.  புயல் காற்று மிகவும் பயங்கரமாக  வீசுகிறது.  எல்லோரையும் இழுத்துத் தள்ளுகிறது என்றாள்.
ஆனால், அவள் அப்பா இப்போதும் நீ காரை மட்டும் ஓட்டிக் கொண்டு இரு என்றார்.
இன்னும் கொஞ்ச தூரம், அவள் காரை ஓட்டிக் கொண்டு சென்றாள்.  

 புயல் அதன் உச்சத்தை எட்டியது.  இப்போது அந்தப் பெண்ணுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. முன்னால் இருக்கும் எதுவுமே தெரியவில்லை.  பாதுகாப்பான இடத்தில் காரை நிறுத்தலாம் என அவள் விரும்பினாலும்,  அவளது அப்பா  புயலின் நடுவே தொடர்ந்து ஓட்டச் சொன்னதால், அவள் காரை தொடர்ந்து ஓட்டினாள்.
 
 புயலின் ஊடாக  சிறிது மைல் தூரம் ஓட்டிய பிறகு, சீக்கிரமே அந்த சூழ்நிலையில்  நல்ல முன்னேற்றம் தெரிந்தது.  முன்னால் உள்ள எல்லாமே தெளிவாகத் தெரிந்தன.  இன்னும் சிறிது மைல் கடந்த பிறகு, அவர்கள்  முற்றிலுமாக புயலை விட்டு வெளியே ஒரு பாதுகாப்பான இடத்திற்கு வந்தனர்.
இப்போது அந்தப் பெண்ணின் அப்பா, அவளிடம்  நீ காரை நிறுத்தி விட்டு வெளியே வரலாம். இப்போதுதான்,  நாம் புயலை விட்டு பாதுகாப்பாக வந்து விட்டோமே! என்றார். எதற்காக காரை நிறுத்த வேண்டும்? என்றாள்.     
மற்றவர்களைப் போல நீயும் புயலுக்கு நடுவில் நிறுத்தி இருந்தால், நீ இப்போதும்  புயலில் போராடிக் கொண்டுதான் இருப்பாய். 

  நீ அப்படி செய்யாமல்,  தொடர்ந்து காரை ஓட்டிக் கொண்டு வந்ததால், நீ புயலைக் கடந்து விட்டாய்.
எடுத்த எடுப்பிலேயே நம் மனதில் சக்தி வாய்ந்த மன உறுதியை எடுத்து அதை முழுவதுமாக பராமரித்து வரும்போது,  தோல்வி என்பதே வராது.  நிச்சயம் முழுமையான வெற்றியை சாதிக்க முடியும். கடுமையான சோதனைகளுக்கு  ஆளாகும் போது,  வலிமையுடையவர்கள் கூட அதில் இருந்து மீண்டு வர தவறி விடுகிறார்கள். ஆனால்  அந்த நேரத்தில், அதை சமாளித்து விட்டால், நமது சொந்தமான வேகத்தில் நாம் முன்னேறிச் செல்லலாம். வழியில் ஏற்படும் கஷ்டங்களையும், சவால்களையும்  தாண்டி கடினமான கால கட்டத்தில் இருந்து  உறுதியாக வெளியே வந்து விடலாம்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...